அதிமுக அலுவலகம் எடப்பாடியின் வசம்!

Filed under: அரசியல் |

எடப்பாடி பழனிசாமியிடம் சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதிமுக அலுவலகத்தை கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற பொழுது ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகிய தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரு தரப்பிலிருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டது. தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.