அதிமுக – காங்கிரஸ் கூட்டணியா?

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

காங்கிரஸ் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு உதயநிதி சனாதனம் குறித்து பேசியதே காரணம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை கூறும் சில நிபுணர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஆலோசனை கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தம்பித்துரை ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்பது தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியும்.