அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது!

Filed under: அரசியல்,தமிழகம் |

எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக முடிந்தது. இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார். இதனால், அவரது அணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. தமிழத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. அம்மா உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லை என்று கூறினால் அதற்கு ஆதாரம் கொடு என்று கூறுகிறார்கள். பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும்” என்று கூறியுள்ளார்.