அதிமுக மாவட்ட செயலாளர்கள் உறுதி!

Filed under: அரசியல் |

இன்று அதிமுக கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை போலவே நாடாளுமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அனைத்து மாவட்ட செயலாளர்களும் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய நத்தம் விசுவநாதன் பொருள்களில் போலியான பொருட்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் போலியாக இருக்கும் ஒரே நபர் ஓபிஎஸ்தான் என்றும் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.