அதிமுக வழக்கறிஞரின் வேண்டுகோள்

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மனித உரிமை ஆணையர் கண்ணதாசனின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்.


செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் திமுகவின் அனுதாபி, அவர் திமுகவுக்கு ஆதரவாக பல தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர், அவரது அறிக்கை திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர். அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் அதே கருத்தை கூறியுள்ளார்.