அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருவதை குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள விளக்கத்தில், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக சாதக பாதகங்களை ஆராய மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசு பேருந்துகள் எதுவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவலும் தவறானது, மக்களுக்கு கிடைக்கிற எச்சலுகையும் பாதிக்கப்படாது” என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.