அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை பார்க்க காரணம் என்ன?

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று அமைச்சர் துரைமுருகன் திடீரென ஆளுனர் ரவியை நேரில் பார்க்க செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆளுநர் ரவியை கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று காலை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ ஆகி சட்டமன்றத்தில் விவாதம் செய்யட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆளுநர் ரவியை சந்திக்க சென்னை கிண்டியிலுள்ள ராஜபவனுக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் ஆளுநர் மாளிகை செல்கிறார். அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சிலர் இலாக்கா மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் ஒரு சிலர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.