அமைச்சர் வீட்டில் ரெய்டு!

Filed under: இந்தியா |

வருமான வரித்துறையினர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முக்கிய அமைச்சர் வீட்டில் ரெய்டு செய்யப்படுவதால் அம்மாநில முதல்வர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறையினர் தெலுங்கானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டொவின் வீட்டில் இன்று காலை திடீரென சோதனை செய்தனர். அமைச்சரின் மகன் மகேந்திர ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர் ஆகியோர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டனர். அமைச்சரின் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை செய்து வருவது அம்மாநிலத்தில் பரபரப்பில் இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளதாக தெலுங்கானா மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சோதனையின் இறுதியில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து வருமானவரித் துறையினர் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.