அரசின் முடிவை பாராட்டிய சீமான்!

Filed under: அரசியல் |

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ளார்.

காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியன்று தமிழகம் முழுதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் டுவிட்டரில், “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்! இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.