அரசியல் பேசவில்லை: மம்தா விளக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த மம்தா பானர்ஜி சந்தித்த நிலையில் தேசியளவில் மாற்றம் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்குமென்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளரிடம், “இது ஒரு மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அரசியல் எதுவும் பேசவில்லை” என்றார். மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். சென்னை சென்றதால் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என்று கூறியுள்ளார். இச்சந்திப்பில் தேசிய அளவிலான கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.