அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு!

Filed under: தமிழகம் |

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தகவல்கள் வெளியான புகாரின் பேரில் பல அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது.

அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை முதலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.2 கோடி தீபாவளி பரிசு பணம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இச்சோதனை மேலும் பல அரசு அலுவலகங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.