அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் எப்போது?

Filed under: தமிழகம் |

அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு படிப்புகளுக்கு மே 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க மே 19ம் தேதி கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.