அரியானா விபத்தில் 7 பேர் பலி!

Filed under: இந்தியா |

அரியானாவில் டிரக் ஒன்று பேருந்தின் மீது மோதிய விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலத்தில் அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. யமுனா நகர் & பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி அந்தப் பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், 7 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். லாரி மற்றும் பேருந்து ஓட்டுனர்களுக்கு எந்தப் பாதிப்புமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.