அர்ஜுன் தாஸ் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் அர்ஜுன் தாஸ் “கைதி” திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர். பின் “மாஸ்டர்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த “அந்தகாரம்” திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீசான “விக்ரம்” திரைப்படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் “அநீதி” படத்தில் கதாநாயகனாகவும் நடித்து முடித்துள்ளார்.

அர்ஜுன் தாஸ் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது அர்ஜுன் தாஸ், தெலுங்கில் பவண் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். “சாஹோ” படத்தின் இயக்குனர் சஜித் இயக்கும் “ஓஜி” படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.