அவசரமாக டில்லி சென்ற கவர்னர்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இயற்றப்பட இருப்பதையடுத்து அவசரமாக டில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் 6 மாதம் கழித்து இந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் இயற்ற போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழக ஆளுநர் ரவி இன்று திடீரென டில்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.