ஆதார் அட்டைக்கு பணம் என்ற வதந்தி!

Filed under: இந்தியா,தமிழகம் |

மத்திய அரசு ஆதார் அட்டை வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன் வழங்குவதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒன்று என்ற நிலையில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இணைத்து ஒரு வதந்தி பரவி வருகிறது. அவ்வகையில் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 4.78 லட்சம் ரூபாய் மத்திய அரசு கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது பொய்யான தகவல் என்றும் இதனை சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.