ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த பிரபல நடிகை!

Filed under: சினிமா |

சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து “வாரிசு” திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ராஸ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜூனுடன் இணைந்து இவர் நடித்த “புஷ்பா 1” மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது “புஷ்பா -2” ஷூட்டிங் நடந்து வருகிறது. தமிழில், கார்த்தியுடன் இணைந்து “சுல்தான்,” விஜய்யுடன் இணைந்து “வாரிசு” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ராஷ்மிகா மந்தனா கவனம் செலுத்தி வருகிறார். தன் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்த நிலையில், வேறு ஒரு பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏமாற்றமடைந்த அவர், இதுகுறித்து வீடியோ பதிவிட்டு, கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்களும் ஆன்லைன் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.