ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து அண்ணாமலை சாடல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் திமுகவினர் வெட்கி தலைகுனிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும். ஆளும் அறிவாலயம் அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.