ஆர்யா – கௌதம் கார்த்திக் இணையும் திரைப்படம்!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்ஐஆர் திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். ஆனால் இந்த படத்தில் நஷ்டம் இல்லாமல் தப்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க உள்ளார். படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு “மிஸ்டர் எக்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.