ஆளுனரை சந்தித்த ஈபிஎஸ் பேட்டி!

Filed under: அரசியல் |

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரை சந்தித்த பின்பு தமிழகத்தில் திறமையற்ற பொம்மை அரசு என்று கூறியுள்ளார்.

ஆளுனரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார்” என்று கூறினார்.