ஆவின் பால் நிறுவனத்தில் 2500 லிட்டர் பால் மோசடி!

Filed under: தமிழகம் |

ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கி தினமும் 2500 லிட்டர் பால் மோசடி வேலூர் ஆவின் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேலூரில் பால் திருட்டு கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரபடுத்திய நிலையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூதனமான முறையில் மோசடி செய்ததன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் திருடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஒரே பதிவு எண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கி தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் திருடப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.