ஆஸ்கர் கலைஞருக்கு கண்டனம்!

Filed under: சினிமா |

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், ஆலியாபட் உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்.” இத்திரைப்படம் “பாகுபலி” பட வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இத்திரைப்படம் குறித்து ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினீயர், எடிட்டர், ஆடியோ மிக்சர் என பன்முக திறமைக்கொண்ட ரசூல் பூக்குட்டி சர்ச்சைக்குரிய விமர்சனம் ஒன்றை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “ரீணீஹ் றீஷீஸ்மீ stஷீக்ஷீஹ்” ஒரு பால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை என விமர்சித்துள்ளார். உலகச் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் மற்றும் இந்தியாவின் தேசிய விருதுகள் வென்ற ரசூல் பூக்குட்டியிடமிருந்து இக்கருத்தை யாரும் எதிர்பார்க்க்கவில்லை என அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.