இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. ஆம் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி படத்தில் இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல் இடம்பெறப்போகிறது.
நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கென்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை ஏமாற்றமளித்து வருகிறார். இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி உட்பட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நிறைவுற்றது. இப்படத்துக்கு ‘காஃபி வித் காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது. “வின்னர்” படத்துக்கு பின்னர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சுந்தர் சி கூட்டணி இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் இடம்பெற்ற ‘ரம் பம் பம் ஆரம்பம்’ பாடலை ரீமிக்ஸ் செய்து இப்பாடலை உருவாக்கியுள்ளார் யுவன்.