இதுவே எனது கடைசி படம்! உதயநிதி ஸ்டாலின்!

Filed under: சினிமா |

நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள உதயநிதி, “கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் எனது கடைசிப் படமாக இருக்கும்” என்று கூறினார். இப்படத்தின் கதையை அவர் இன்னும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் கமலின் “இந்தியன்- 2” தயாராகி வருகிறது. அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தையும் இந்நிறுவனம்தான் வெளியிடுகிறது.