இந்திய இராணுவத்தில் அதிரடி சட்ட திருத்தம் : இளைஞர்களுக்கு மூன்று ஆண்டு இராணுவத்தில் பதவி!

Filed under: இந்தியா |

இந்திய இராணுவம் உலகில் மூன்றாவது மிக பெரிய இராணுவம், 130 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்களின் போது கணிசமான தொகை இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது.

மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு சீர்திருத்தங்களை இராணுவத்தில் செய்து வருகிறது, இந்திய இராணுவ வீரர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் காலணிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே தற்போது தயாரிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது அதில் மேலும் ஒரு சீர்திருத்தம் செய்யும் விதமாக இளைஞர்களுக்கு மூன்று ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பினை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது, விருப்பம் உடைய இளைஞர்கள் 3 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்ற விரைவில் இந்திய இராணுவ சட்டத்தில் மாற்றம் கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ராணுவத்தில் திறமையான இளைஞர்களை சேர்க்க பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறுகிய கால சேவையாக, ராணுவத்தில் இணையும் இளைஞர்கள் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்

இராணுவத்தில் மேற்கொள்ள இருக்கும் 10 புதிய சீர்திருத்த திட்டத்தில், அதனை 3 ஆண்டுகளாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட வரையறைகள் இறுதி செய்யப்படவில்லை இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

©நெற்றிக்கண்