இந்தி தெரியாது போடா: உதயநிதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

உதயநிதி ஸ்டாலின், எந்த வழிகளில் இந்தியை திணித்தாலும் நாங்கள் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான் அது “இந்தி தெரியாது போடா” என்று கூறியுள்ளார்.

இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி சார்பில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது “ஹிந்தி தெரியாது போடா” என்றுதான். இந்தி தெரியாது போடா என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். அதையும் மீறி இந்தியை திணிக்க முயன்றால் டில்லியில் வந்து போராட்டம் நடத்துவோம். 2010ம் ஆண்டு தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, அதேபோல் 2024ம் ஆண்டு தேர்தலிலும் விரட்டுவோம்” என்று சென்னையில் நடைபெற்ற ஹிந்தி மொழிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.