அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் காலியிடங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகமிருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இவ்வாண்டு காலியிடங்கள் இருக்காது என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.10 லட்சம் பேருக்கு அக்டோபர் 13ம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இவ்வாண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இந்த ஆண்டு நிச்சயமாக காலியிடங்கள் இருக்காது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.