இந்த மூன்று நடிகைகள்; வெங்கட்பிரபு!

Filed under: சினிமா |

விரைவில் தொடங்கவிருக்கும் நடிகர் விஜய்யின் “தளபதி 68” படத்தில் இந்த மூன்று நடிகைகள் கண்டிப்பாக கிடையாது என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

தளபதி விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நடிகைகளும் ஹீரோயினாக நடிக்க மாட்டார்கள் என்பதை வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் மேற்கண்ட 3 நடிகைகளும் இல்லை என்று கூறி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது