முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் மட்டுமே நியாயமான பதவிகள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே செயற்கையான பதவிகளை உருவாக்கினார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை இணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை செயற்கையாக உருவாக்கினார். அந்த பதவிகள் செல்லாது” என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.