இயக்குனருக்கு ஆசி வழங்கிய கமல்ஹாசன்!

Filed under: சினிமா |

நடிகை நயன்தாரா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்றேன் என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “கோல்டு.” இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன். இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது டுவிட்டரில், “சினிமாவின் எவரெஸ்ட் சிகரமான உலக நாயகன் கமல்ஹாசனை முதல்முறையாக சந்தித்தேன். அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன், அவரது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான் ஒரு மாணவனாக அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டேன்” என பதிவிட்டுள்ளார்.