இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சி அறிவிப்பு!

Filed under: சினிமா |

சமூக வலைதளத்தில் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இனிமேல் திரைப்படங்கள் இயக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன் நிவின் பாலி நடித்த “நேரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இத்திரைப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு “பிரேமம்” திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அகில இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் மூலம்தான் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஆகியோர் பிரபலமானார்கள். இதையடுத்து “அவியல்” மற்றும் நயன்தாரா நடித்த “கோல்டு” ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது “கிப்ட்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் அல்போன்ஸ் தனது சமூக வலைதளத்தில், “எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதால் திரையரங்குகளுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொள்கிறேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், ஏதேனும் வெப் தொடர்கள் இயக்க முயற்சி செய்வேன்” என்று- பதிவிட்டுள்ளார். இப்பத்திவினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.