இயக்குனர் மிஷ்கின் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்குமிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படம் பிப்ரவரியில் தொடங்குமென சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியில், மிஷ்கின் படம் பற்றி பேசுகையில் “அந்த படத்துக்கான கதையை இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். அரைமணிநேரம் அளவுக்கு எழுதியுள்ளேன். அதைப் பற்றி இப்போது அதிகமாக பேச முடியாது” எனக் கூறியுள்ளார்.