இயக்குனர் ஹரி & விஷால் இணையும் புதிய படம்!

Filed under: சினிமா |

நீண்ட இடைவெளிக்கு பிறகு “யானை” திரைப்படத்தின் மூலம் ரீ&எண்ட்ரி கொடுத்தார் இயக்குனர் ஹரி.

இத்திரைப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலில் குறைவைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஹரி மீண்டும் தன்னுடைய ஹிட் பார்முலா படமான போலீஸ் ஆக்‌ஷன் கதைக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷால் நடிக்கும் போலீஸ் ஆக்‌ஷன் கதையை ஹரி இயக்க உள்ளாராம். படத்தை கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஹரி இயக்கத்தில் உருவான “சாமி,” “சிங்கம்” மூன்று பாகங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகின. தமிழ் சினிமாவில் போலீஸ் ஆக்‌ஷன் படங்கள் எடுப்பதில் வல்லவர் என பெயர் பெற்றார் ஹரி. இப்போது மீண்டும் அவர் போலீஸ் கதைக்கு வருவது அவர் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.