இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

Filed under: தமிழகம் |

கோவை, மே 27

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும், மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவரும், கார்த்திக் சிதம்பரம் எம்.பி.யின் தீவிரமான ஆதரவாளருமான ஹரிஹரசுதன் தலைமையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி முன்பு இன்று காலையில் 144 தடை உத்தரவின் காரணமாக சமூக இடைவெளியுடன் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்திக்கொண்டு நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியில் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு சங்கர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் முக்கிய பிரமுகரான இமயம் ரகமத்துல்லா மற்றும் எண்ணற்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.