1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இளையராஜா. இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.