இளையராஜா – பாரதிராஜா மார்கழி திங்கள் அப்டேட்!

Filed under: சினிமா |

மனோஜ் பாரதிராஜா “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் 1999ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் அவரால் பெரியளவில் திரையுலகில் வலம் வர முடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இயக்குனராகும் கனவோடு இருந்த தன்னை தனது தந்தைதான் நடிகராக்கிவிட்டார் எனக் கூறியிருந்தார்.

தற்போது மனோஜ், “மார்கழி திங்கள்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, சுசீந்திரன் தன்னுடைய வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்போது இளையராஜா இந்த படத்துக்கான இசையமைப்புப் பணிகளை தொடங்கியுள்ளார். பாரதிராஜா, இளையராஜா மற்றும் மனோஜ் பாரதி ஆகியோர் இசையமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.