ஈக்வடார் நாட்டில் பயங்கரம்!

Filed under: உலகம் |

3 இளம்பெண்கள் உள்ளிட்ட பிரபல பாடகியையும் ஈக்வடார் நாட்டில் குயினேட் கடற்கரையில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்வடார் நாட்டின் குயினேட் கடற்கரைக்கு வந்த மீனவர்களின் நாய் ஒன்று கடற்கரை ஓரத்தில் இருந்த பகுதியை தோண்டி 3 இளம்பெண்களின் சடலத்தைக் கண்டுபிடித்தது. இதுகுறித்த மீனவர்கள் போலீசுக்குத் தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பெண்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு முன் இக்கடற்கரையில் உல்லாசப் பயணம் மேற்கொள்ள வந்த 3 இளம்பெண்களை சில ரவுடிகள் துரத்தியுள்ளனர். இதனால் பயந்த பெண்கள் தங்கள் தோழிக்கு சமூக வலைதளம் மூலம் தகவலளித்தனர். கடைசியில் 3 பேரும் அடையாளம் தெரியாத நபர்களா கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த 3 பெண்களில் ஒருவர் நயேலி, இவர் ஒரு பாடகர் மற்றும் திருமணமனமானவர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.