ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை!

Filed under: தமிழகம் |

இளைஞர் ஒருவர் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புகழ்பெற்ற ஈஷா யோகா மையம் கோயம்புத்தூரில் பிரம்மாண்ட சிலையுடன் உள்ளது. இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சிவராத்திரியன்று இங்கே மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வருகை தருவார்கள்.
இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற 28 வயது இளைஞர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யோகா மையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.