உக்ரைன் போர் குறித்து ரஷ்யா முக்கிய தகவல்!

Filed under: உலகம் |

ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீதான போர் தொடுக்க ஆரம்பித்து 10 மாதங்களாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி உக்ரைன் போருக்கு விடுமுறை? அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. பல முறை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால், இது அண்டை நாடுகளுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரஷ்யா இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதை ரஷ்யா மறுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, இடைக்காலப் போர் நிறுத்தமின்றி தொடர்ந்து போர் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.