உச்ச நீதிமன்றம் இனிமேல் காகிதமில்லா நடைமுறை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்து, ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 49வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் இந்திய அரசியலமைப்பு அமர்வில் இனிமேல் காகிதமில்லா நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அங்குள்ள வழக்கறிஞர்களுக்கும், தொழில் நுட்பப்பயிற்சி அளிக்கப்படும் என்றும், காகிதக் கட்டுகளுக்குப் பதில் வழக்கு விவரங்களை ஸ்கேன் செய்து காட்டும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.