உதயநிதியிடம் தைரியமிருந்தால் கலால் துறையை கொடுக்க முடியுமா?

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் சி.வி.சண்முகம் “தைரியம் இருந்தால் கலால் துறையை உதயநிதியுடம் கொடுங்கள் பார்ப்போம்” என்று சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர், “அமைச்சர் முத்துசாமி தற்போது மதுவிலக்கு மற்றும் கலால் துறையை கவனித்து வருகிறார். அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களையும் காவு கொடுத்து விடுவார்கள். முதலமைச்சரே உங்களுக்கு தைரியமிருந்தால் கலால் துறையை உங்கள் மகன் உதயநிதியிடம் கொடுங்கள். யாரோ ஒருவருக்கு கலால் துறையை கொடுப்பீர்கள், அவர் கொள்ளையடித்து உங்கள் குடும்பத்திற்கு கொடுப்பார், வழக்கு என்று வந்தால் மட்டும் அந்த துறையை வைத்திருப்பவர் சிறைக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்வியை சிவி சண்முகம் எழுப்பியுள்ளார்” என்று சவால் விட்டுள்ளார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.