உதயநிதி துணை முதல்வராக வேண்டும்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சரையாக்கவேண்டும் என்று பேசியுள்ளார்.

தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேசிய போது, “அமைச்சர் உதயநிதியின் உழைப்பு ஒரு துறையோடு நின்று விடக்கூடாது. முதலமைச்சருக்கு துணை நின்று அனைத்து துறைகளின் பணிகளையும் உதயநிதி மேற்கொள்ள வேண்டும். அமைச்சராக பதவியேற்று பலரும் பாராட்டுத்தக்க வகையில் உதயநிதி செயலாற்றி வருகிறார்” என்று அவர் உதயநிதியை பாராட்டியுள்ளார்.