உலகநாயகனின் “விக்ரம்“ ஓடிடி தேதி!

Filed under: சினிமா |

சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள திரைப்படம் “விக்ரம்”.


உலகம் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன் விஜய் சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.