உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கவுரவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிரபலமானவர்களுக்கு அரசு அமீரகம் கடந்த சில காலமாக கோல்டன் விசா என்னும் சிறப்பு விஐபி விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன்பு சரத்குமார், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கியது. தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.