உலகநாயகன் கமலஹாசனின் படம் தொடங்குவதில் சிக்கல்!

Filed under: சினிமா |

உலகநாயகன் கமலஹாசனின் “சபாஷ் நாயுடு” தி¬ப்படத்தைத் தொடங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘சபாஷ் நாயுடு’ திரைப்படம் லைகா தயாரிப்பில் கமலஹாசன் எழுதி இயக்குவதாக தொடங்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. அமெரிக்காவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமலுக்கு அப்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மீண்டும் தொடங்கப்படாமலேயே கிடப்பில் இருந்தது. படத்தைப் பற்றி அனைவரும் மறந்து போன நிலையில் தற்போது மீண்டும் இப்படம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக லைகா மற்றும் கமலஹாசன் ஆகிய இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது படத்தை தொடங்குவதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் பிரம்மானந்தம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் அதிகளவில் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும், அதனால் அவர் இந்த படத்தில் நடிக்க விருப்பப்பட வில்லை என்று கூறப்படுகிறது.