எலான் மஸ்க் வசமானது டுவிட்டர்!

Filed under: உலகம் |

டுவிட்டரின் நிர்வாகக் குழு எலான் மஸ்க்கிடம் டுவிட்டர் நிறுவனத்தின் ஒப்புதலை வழங்கி உள்ளது.

உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். டுவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.43 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். இதனால், உலகமே இது குறித்து பேசிக் கொண்டிருந்தது. டுவிட்டர் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. இந்நிலையில், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது டுவிட்டர் நிர்வாகக் குழு. ஏற்கனவே, டுவிட்டர் நிறுவனத்தில் அதன் எண்ணிக்கையை விட சுமார் 5 % போலி கணக்குகள் இருப்பதாகவும் அதுகுறித்து வெளிபடைத்தன்மையுடன் கணக்கை சமர்ப்பிக்கும்படி கூறினார். ஆனால், இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.