ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிய இளைஞர் காங்கிரஸ்!

Filed under: தமிழகம் |
கோவை மே 15
வே மாரீஸ்வரன்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக  கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, அத்துடன் ஊரடங்கு உத்தரவு இருந்த காரணத்தினால் கோவை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி போய் இருந்தனர். அத்துடன் அன்றாட வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் அரசம்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு அவர்களுக்கு தேவையான அரிசி, முகக்கவசம், மற்றும் காய்கறிகள் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக வழங்கப்பட்டன.

மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும், கார்த்திக் சிதம்பரம் எம்.பி.யின் தீவிர ஆதரவாளருமான ஹரிஹரசுதன் தலைமையில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சக்திவேல் முன்னிலையில் அரசம்பாளையம் பொதுமக்களுக்கு இலவச நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இமயம் ரஹமத்துல்லா, கோபாலகிருஷ்ணன், வித்யாசாகர், மற்றும் செந்தில்குமார், காளிமுத்து, இவர்களுடன் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். தற்போது கோவை மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.