ஓடிடியில் ரிலீசான மாமன்னன்!

Filed under: சினிமா |

உதயநிதி மற்றும் வடிவேலு நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த “மாமன்னன்” கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.