ஓபிஎஸ்ஸின் பிளான் ஒர்க்அவுட் ஆகுமா?

Filed under: அரசியல் |

ஓபிஎஸ் அதிமுக நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வருமாறு ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக கட்சியில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகராமாகி ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது. அதை தொடர்ந்து ஜூலை 11ல் மீண்டும் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியாகியுள்ள இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று முதலாக சட்ட வல்லுனர்கள் மட்டும் அதிமுக நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அதிமுக நலனுக்காக ஒன்றிணைய வருமாறு ஈபிஎஸ்-க்கு, ஓபிஎஸ் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.