ஓபிஎஸ் இல்லத்தில் அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழகத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை திடீரென்று ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கட்சியில் பாஜகவில் உள்ள நிர்வாகிகள் திடீரென சேர்ந்து வருகின்றனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கின்றனர். மேலும் அதிமுகவின் கூட்டணியில் பாஜக இடம்பெறுவது சந்தேகமே என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார். சமீபத்தில் ஓபிஎஸ் தாயார் மறைந்த நிலையில் அவரது தாயார் படத்திற்கு மாலை அணிவித்து அண்ணாமலை மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அண்ணாமலை, ஓ பன்னீர் சொல்லத்துடன் இணக்கமாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.